நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்!

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2018 09:25 am
steve-smith-marries-long-time-girlfriend-dani-willis

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிசை நேற்று ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஓராண்டு தடை நடவடிக்கைக்கு உள்ளானார். தடைக்காலம் முடிந்து மீண்டும் அவரால் மார்ச் மாதம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப முடியும். தற்போது அவர் கிளப் அணிகளுக்காக விளையாடிக் கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிசை நேற்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். டேனி சட்டப்படிப்பு படித்தவர். 

இதுதொடர்பாக ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எனது தோழியை திருமணம் செய்துள்ளேன். இது என்னால் மறக்க முடியாத நாள். டேனி இன்று மிகவும் அழகாக இருந்தார்" என தெரிவித்துள்ளார். 

ஸ்டீவ் ஸ்மித்தின் திருமணத்துக்கு நேரில் சென்ற ஆரோன் பிஞ்ச், கவாஜா, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் உள்ளிட்ட சக வீரர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு கிரிக்கெட் உலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close