ஃபார்முலா ஒன் கார்பந்தயம் போட்டிக்கான சிங்கப்பூர் கிராண்ட்பிரீ 15வது சுற்றில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ஒரு மணி 51 நிமிடம் 11.611 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், 25 புள்ளிகளையும் பெற்றார்.
2018ம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரீ, அந்நாட்டின் மரினா பே ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது.
இதில் நடப்பு சாம்பியனும், இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் ஒரு மணி 51 நிமிடம் 11.611 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், 25 புள்ளிகளையும் வசப்படுத்தினார். இந்த சீசனில் ஹாமில்டனின் 7வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் பெற்ற 69வது வெற்றியாகும்.
அவரை விட 8.961 விநாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 18 புள்ளிகளையும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 3வதாக வந்து 15 புள்ளிகளையும் பெற்றனர்.
Such a special weekend! I can’t thank the team enough for everything that they do, they truly inspire me. It felt like the longest race, I’m spent! Thank you to the fans for the incredible support. Giving all the glory to God 🙏🏾 #StillWeRise #Godisthegreatest @MercedesAMGF1 pic.twitter.com/HAJ3xs0YBl
— Lewis Hamilton (@LewisHamilton) September 16, 2018
இதுவரை நடந்துள்ள 15 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 241 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் 174 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
newstm.in