ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பரிந்துரை

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2018 03:20 pm
virat-kohli-recommended-for-rajiv-gandhi-khel-ratna-award

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. பிசிசிஐ, விளையாட்டுத் துறையிலேயே மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை விராட் கோலிக்கு வழங்க பரிந்துரைத்துள்ளது. மேலும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா வழங்கவும் இந்திய பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் இருவர் பெயரையும் விளையாட்டுத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திற்கு கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனிக்கு பிறகு கேல் ரத்னா விருது பெறும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். 1997ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கும், 2007ம் ஆண்டு எம்.எஸ். தோனிக்கும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close