கேல் ரத்னா விருது பெற்றார் கோலி!

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 05:59 am
kohli-chanu-receive-khel-ratna

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு, டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 

விளையாட்டுத் துறையில் உச்சகட்ட சாதனை புரியும் வீரர் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கேல் ரத்னா விருது வழங்கப்படும். இந்த ஆண்டு, தேசிய விளையாட்டு தினத்தில் நடைபெற வேண்டிய விருது நிகழ்ச்சி, செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதால், விருது நிகழ்ச்சி தாமதமானது. 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், விராட் கோலி, மற்றும் மீராபாய் சாணுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 4 ஆண்டு காலத்தில், விளையாட்டுத் துறையில் சாதனை புரிவதாக இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கேல் ரத்னா விருது தவிர, 20 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.தடகள வீராங்கனை ஹிமா தாஸ், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கால்பந்து வீரர் ஜின்சன் ஜான்சன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பாத்ரா உள்ளிட்டோர் அர்ஜுனா விருதை பெற்றனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close