இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார் ஹிமா தாஸ்

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 12:18 pm
hima-das-joins-indian-oil-as-hr-office

ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களை  வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹிமா தாஸுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பல்வேறு சாதனைகளை புரிந்தவர் ஹிமா தாஸ். இவர் ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களை  வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

18 வயதாகும் ஹிமா தாஸ் அசாமைச் சேர்ந்தவர். மேலும் சமீபத்தில் இவருக்கு இந்தாண்டுக்கான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் ஹிமாதாஸூக்கு வேலை வழங்கி கௌரவித்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.ஓ.சி நிர்வாகம் சார்பில்,  `ஹிமா தாஸை எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இணைத்துக்கொள்வதில் பெருமையடைகிறோம்" என தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close