இந்திய ஒலிம்பிக் வீரர் ஜித்து ராய் கிக் பாக்சரை மணமுடித்தார்

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2018 08:27 pm
olympian-jitu-rai-ties-the-knot-with-kickboxer-sushmita

ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீரர் ஜித்து ராய் கிக் பாக்சர் சுஷ்மிதா ராய்யை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் கிழக்கு சிக்கிம்மில் நடைபெற்றது. 

2016ம் ஆண்டு பாகுவில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஜித்து ராய். அதற்கு முன்னர் 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் ஜித்து 50மீ பிஸ்டல் பிரிவில் தங்கமும், 10மீ பிஸ்டல் பிரிவில் வெண்களமும் வென்றார். 

2016ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில்  10 மீ ஏர் பிஸ்டர் பிரிவில் இறுதிச்சுற்று வரை சென்ற அவர் கடைசியில் பதக்கத்தை நழுவவிட்டார். இவர் கடந்த ஞாயிறு அன்று கிக் பாக்சிங் வீராங்கனை சுஷ்மிதா ராய்யை திருமணம் செய்து கொண்டார். சுஷ்மிதா கடந்த 2015ம் ஆண்டு ஆசிய கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close