பாலியல் புகார்: ரொனால்டோவின் முன்னாள் காதலிகளிடம் விசாரணை

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2018 11:28 am
ronaldo-s-ex-girlfriends-could-be-made-to-testify-in-rape-case

அமெரிக்காவிவ் மாடலாக பணியாற்றி வரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ மீது எழுந்துள்ள புகார் விவகாரத்தில், அவரின் முன்னாள் காதலிகளிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். இவர் 2009ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் உள்ள நட்சத்திர விடுதியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் அதை மறைக்க ரூ. 3 கோடி வரை பணம் தருவதாக பேரம் பேசினார் எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து லாஸ்வேகாஸ் நீதிமன்றம் ரொனால்டோ  நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரை ஒட்டுமொத்தமாக மறுத்திருந்த ரொனால்டோ, மேயோர்காவின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தன் நற்பெயரை கெடுக்க சதி வேலை நடப்பதாகவும்  அவர் அறிவித்தார்.

இதனிடையே, பாலியல் வன்கொடுமைப் புகார்  எழுந்ததையடுத்து எதிர்வரும் நாட்களில் நட்பு ரீதியாக நடத்தப்படும் போட்டிகளுக்கான போர்ச்சுக்கல் அணியில் அவர் பெயர் இடம் பெறவில்லை. போர்ச்சுக்கல் அணி வரும் அக்டோபர் 11ம் தேதி போலந்து அணியுடனமும் பின் ஸ்காட்லாந்து அணியுடனும் நட்பு ரீதியான போட்டிகளில் பங்கேற்க உள்ளது. 

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ரொனால்டோவின் முன்னாள் காதலிகளான கெம்மா அட்கின்சன், பாரிஸ் ஹில்டன், கிம் கதர்ஷியன் இரினா சய்க் ஆகியோரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close