டெஸ்டில் அறிமுகமானார் ஷர்துல் தாகூர்

  Newstm Desk   | Last Modified : 12 Oct, 2018 12:26 pm
shardul-thakur-handed-test-debut-mohammad-shami-rested

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் அறிமுகமாகி உள்ளார். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் அறிமுக வீரராக களமிறங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் 5வது வீரர் இவர். மேலும் இந்திய அணிக்காக டெஸ்டில் களமிறங்கும் 294வது வீரர் இவர்.

 

 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேமர் ரோச் இடம்பெறவில்லை. கீமோ பால் செர்மன் லெவிசுக்கு பதில் ஜேசன் ஹோல்டர், ஜோமல் வாரிகன் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close