ஆசிய பாரா போட்டிகள்: தீபா மாலிக் வெண்கலம் வென்றார்!

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2018 02:45 pm
asian-para-games-paralympic-medallist-deepa-malik-wins-bronze-in-discus-throw

இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் பாரா ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. நேற்று பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் தங்கம் வென்றார். 

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் யாதவ் 29.84 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதே போட்டியில் அமித் பல்யான் வெள்ளி வென்றார். 

தொடர்ந்து கிளப் துரோவில் இந்திய வீரர் அமித் குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் தரம்பிருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் வெண்கலப்பதக்கம் பெற்றார். அவர் ஈட்டி எறிதலிலும் வெண்கலம் வென்றார். தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 9வது இடத்தில் உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close