இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக எஸ்.வாசுதேவன் பொறுப்பேற்றார்.

  டேவிட்   | Last Modified : 18 Oct, 2018 04:09 pm
vasudevan-taken-charge-as-president-of-volleyball-federation-of-india

இந்திய கைப்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தலைவராக இருந்த அவ்தேஷ்குமார் சவுத்ரி நீக்கம் செய்யப்பட்டு புதிய தலைவராக தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் தலைவர் எஸ்.வாசுதேவன் தேர்வு செய்யப்பட்டார்.

ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அறிவிக்கப்படாமல் சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று நீக்கம் செய்யப்பட்ட தலைவர் அவ்தேஷ்குமார் சவுத்ரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் ராமவ்தார்சிங் ஜாக்கர் மனு செய்தார்.இருதரப்பு வாதங்கள் முடிந்து நீதிபதி நஜ்மி வஜிரி தீர்ப்பளித்தார். அதில், ‘இந்திய கைப்பந்து சம்மேளனத் தலைவராக எஸ்.வாசுதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், ராமவ்தார்சிங் ஜாக்கர் தலைமையில் நடைபெற்ற இந்திய கைப்பந்து சம்மேளன செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக எஸ்.வாசுதேவன் நேற்று பொறுப்பேற்றார்.  ராமவ்தார் சிங் ஜாக்கர் பொதுச்செயலாளராகவும், சேகர் போஸ் பொருளாளராகவும் தொடர்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close