புரோ கபடி: பாட்னா அணியிடம் வீழ்ந்த பெங்கால்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 02:13 pm
pro-kabaddi-patna-beats-bengal

புரோ கபடி லீக் போட்டியில் பாட்னாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 29-27 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வீழ்த்தியது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 6வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். இதனால் இரு அணிகளின் புள்ளிகள் சமனிலையில் இருந்து வந்தது. ஆட்டத்தின் இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி சிறப்பாக விளையாடியது. இதையடுத்து, பெங்கால் வாரியர்ஸ் அணியை 29 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி நான்காவது வெற்றியை பெற்றது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close