டி20 போட்டிக்கான டிக்கெட் நவ- 4 ஆம் தேதி முதல் விற்பனை!

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Nov, 2018 08:13 pm
t-20-ticket-for-sale-from-nov-4

சென்னையில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற நவம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான 3 ஆவது டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. அந்த இறுதி டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வருகிற நவம்பர் 4 ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை )  காலை 11.30 மணியளவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ரசிகர் அதிகபட்சம் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,200 ரூபாய் என்றும் அதிகபட்ச டிக்கெட் விலை 12000 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close