புரோ கபடி: மும்பையிடம் வீழ்ந்த புனே அணி!

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 09:27 am
pro-kabbadi

உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி அடைந்து வந்த புனேரி பல்டன் அணி தோல்வியை சந்தித்தது. 

6வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியும், யு மும்பா அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி 19 - 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக ஆடியது. இறுதியில், புனே அணியை 31 - 22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு கிடைத்த ஆறாவது வெற்றியாகும். 

இதற்கு முன் புனே அணி தொடர்ந்து வெற்றியடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close