ஹர்பஜன் சிங்கின் 'தமிழ்' அட்ராசிட்டி.. தொடரும் மீம்ஸ்கள்!!

  நந்தினி   | Last Modified : 30 Mar, 2018 05:24 pm

ஐ.பி.எல்-ல் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு முன்பை இருந்ததை விட அதிக பொலிவுடன் களமிறங்க தயாராகி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த ஆண்டுக்கான போட்டியில் சி.எஸ்.கே அணியில் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளார். இந்த அணிக்காக இடம் பெற்றதை தொடர்ந்து, சென்னை மக்களுக்காக தமிழ் கற்று வருகிறார் பாஜி.

நான் வந்துட்டேன்னு சொல்லு... தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது". தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!! இது தான் அவர் தமிழில் போட்ட முதல் ட்வீட். இதனை அடுத்து பல மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்தன.

ஆனால், இந்த கலாய்க்கும் மீம்ஸ்களால் தளர்ந்து போகாத பாஜி, தற்போது மீண்டும் தமிழில் ட்வீட் போட்டு அனைவரையும் அசரவைத்துள்ளார்.

"தமிழ் நாட்டுக்கு வருகைதந்த நாளில் இருந்து, தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவுகடந்த பாசமும் நேசமும் என்னை வியக்க வைக்கிறது. உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே... இந்த பந்தம் தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியமாகத் தொடரட்டும்.." என்று ட்வீட் செய்துள்ளார்.

இதை பார்த்த நம்ம நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா.. இதற்கும் தங்கள் சார்பில் இருந்து பாஜிக்காக பல மீம்ஸ்களை அள்ளி வழங்கியுள்ளனர். அதில் சில உங்களுக்காக..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close