இந்தியா- பாகிஸ்தான் இடையேயான முதல் டி20: இன்று தொடங்குகிறது

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 12:00 pm
india-vs-aussie-first-t20

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிகள் இன்று  பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுகிறார்.

முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தொடர்ச்சியாக 7 டி20 தொடர்களில் வெற்றியை வசப்படுத்தி உள்ள இந்திய அணி ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது. 2017 ஜூலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் தோற்ற இந்திய அணி, அதன் பிறகு விளையாடிய அனைத்து தொடர்களிலும் வென்றுள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியா சென்று விளையாடிய டி20 தொடரிலும் இந்தியா 3-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியதால் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விளையாடிய எந்த டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. 

மிகுந்த நம்பிக்கையுடன் உள்ள இந்திய அணி நிர்வாகம், முதல் போட்டிக்கான 12 வீரர்கள் அடங்கிய அணியை நேற்று அறிவித்துவிட்டது. 

 

 

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் அந்த அணியில் இல்லாததது அந்த அணிக்கு பெரும் பலவீனமாக உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close