டென்னிஸ் விளையாடிய தோனி: வைரல் புகைப்படங்கள்!

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 11:17 am
ms-dhoni-swaps-the-cricket-bat-with-the-tennis-racquet

ஜார்கண்ட் கிரிக்கெட் மைதானத்தில் டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டென்னிஸ் விளையாடும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடிய இந்திய அணியில் தோனி சேர்க்கப்படவில்லை. கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்துள்ள 37 வயதான தோனி, தற்போது டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். 

ஜார்க்கண்டை சொந்த மாநிலமாகக் கொண்ட தோனி, ராஞ்சியில் நாளை தொடங்கும் உள்ளூர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.

இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள், பெண்கள், 16 வயதுக்கு உட்பட்டோர் என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வேறு ஒருவருடன் இணைந்து தோனி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடர் வரும் நவம்பர் 30ம் தேதி வரை ஜார்கண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் அவர் பயிற்சி எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close