டென்னிஸிலும் சாம்பியன் பட்டம் வென்றார் தோனி

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 01:38 pm
ms-dhoni-picks-up-tennis-racquet-wins-a-local-tournament-in-jharkhand

கிரிக்கெட் உலகை கலக்கி வந்த தல தோனி தொட்டத்தெல்லாம் சிக்சர் தான் என்பது போல ஜார்கண்ட்டில் நடந்த உள்ளூர் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடிய இந்திய அணியில் தோனி சேர்க்கப்படவில்லை. கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்துள்ள 37 வயதான தோனி, தற்போது டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். 

ஜார்க்கண்டை சொந்த மாநிலமாகக் கொண்ட தோனி, ராஞ்சியில் உள்ளூர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டு விளையாடினார்.

இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள், பெண்கள், 16 வயதுக்கு உட்பட்டோர் என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் உள்ளூர் வீரர் சுமித் குமார் என்பவரோடு இணைந்து தோனி பங்கேற்றார். நேற்று இதன் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் தோனி இணை  6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்றுள்ளது. இதனையடுத்து வழக்கம் போல தோனி ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close