இந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்!

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 01:13 pm
team-india-no-saints-they-started-sledging-war-in-australia-sunil-gavaskar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா வீரர்களுக்கும் ஆஸ்திரேலிய வீர்ர்களுக்கும் இடையே நடந்த வார்த்தை போர் குறித்து பேசியுள்ள கவாஸ்கர் இந்திய அணி இப்படி செய்ததே இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிப் பெற்றது. மேலும் இன்று முடிந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சிக்கி தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இடையே நடந்த வார்த்தை போர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து முன்னாள் வீரர்களும்,கிரிக்கெட் விமர்சகர்களும் பேசி வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

"ஆஸ்திரேலிய அணி எப்போதும் இப்படி தான். இப்படி விளையாடுவது நம் டிஎன்ஏவிலேயே கிடையாது.  இந்திய அணி வீரர்கள் யாரும் ஞானிகள் கிடையாது. இம்முறை இந்த வார்த்தை போரை முதலில் தொடங்கியது இந்தியா தான். இது என்றும் நமக்கு வெற்றியைப் பெற்றுத் தராது. இந்திய அணி கேப்டனாக விராட் கோலி இன்னும் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close