மீம்ஸ்களால் பிராவோக்கு பாராட்டு மழை

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Apr, 2018 08:48 pm

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய பிராவோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் தோனி மட்டுமல்ல நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் நேற்று தனது முதல் ஆட்டத்தை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கின. முதலில் டாஸ் வென்று பந்து வீச்சுடன் சிஎஸ்கே களமிறங்கியது.

முதலில் பேட் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய சென்னை அணி, ஒரு பந்து மீதமிருக்கும் போது 169 ரன்களை எடுத்து வெற்றியடைந்தது.

பிராவோ அதிரடியாக விளையாடி, 30 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதில் 3 பவுண்டரியும் 7 சிக்சர் அடங்கும்.

ஆட்டநாயகன் விருதை பிராவோ வாங்கியதோடு, பல ரசிகர்களின் மனங்களிலும் பிராவோ என்றால் பிரேவ் என்ற வசனத்துடன் குடியேறினார்.

இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கேவின் ஆட்டத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாக பிராவோ கூறினார். ஆனால் அவருக்கு இணையதளவாசிகள் மீம்ஸ்களால் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ‘இது வேற மாதிரி ஆட்டம். வெறித் தனமான ஆட்டம். இது சும்மா ஆரம்பம் தான் மா.. சென்னை ஐபிஎல்-ன்னு சொன்னாலே பழைய ரெகார்டஸ் லாம் கண்ணு முன்னாடி வந்து போகுதா...? பிராவோ நீ கலக்கிட்ட பங்கு...’என பதிவிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close