ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில்!

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 12:52 pm
chris-gayle-to-retire-from-odis-after-icc-world-cup-2019

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.  

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றவர் கிறிஸ் கெயில்.

ஆனால், சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அவர் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில்,  கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் விளையாடினார்.

இந்நிலையில், அவர் 50 ஓவர்கள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close