சிறப்பு ஒலிம்பிக்ஸ்; 233 பதக்கங்களை வென்ற இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 06:23 pm
indian-athletes-win-233-medals-in-special-olympics-2019

அபு தாபியில் நடைபெற்று வரும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 60 தங்கம், 83 வெள்ளி, 90 வெண்கலம் என மொத்தம் 233 பதக்கங்களை வென்றுள்ளனர். 

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 2019 சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகள், அபு தாபியில் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் 14ம் தேதி துவங்கிய போட்டிகள், நாளை முடிவுக்கு வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். நேற்று வரை நடைபெற்ற போட்டிகளில், இந்தியா 60 தங்கம், 83 வெள்ளி மற்றும் 90 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. 

தடகளம்,  டென்னிஸ், பளுதூக்குதல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்தியர்கள் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதில், சிறு வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட, அமிர்தசரஸை சேர்ந்த 22 வயது ஷல்லு என்ற வீராங்கனை, பளுதூக்குதலில் 4 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close