25 பந்துகளில் சதம் அடித்த 20 வயது கிரிககெட் வீரர்

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 10:23 am
england-batsman-will-jacks-slams-six-sixes-in-an-over-en-route-to-25-ball-hundred-in-t10-game

சர்ரே அணியின் 20 வயதாகும் வில் ஜாக்ஸ் என்ற இளம் வீரர் வெறும் 25 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். 

இங்கிலாந்தில் புகழ்பெற்ற கவுண்டி அணிகளுக்கு இடையேயான டி10 போட்டிகள் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சர்ரே - லாங்கஷைர் அணிகளுக்கிடையேயான போட்டியில் சர்ரே அணியின் பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். ஆட்டத்தின் 5-வது ஓவரில் சதம் அடித்தார் வில் ஜேக்ஸ். 20 வயதான வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் 105 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கு முன்னர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அஜாம் 26 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

10 ஓவர் முடிவில் 176 ரன்களை எடுத்தது சர்ரே அணி. லாங்கஷைர் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சர்ரே அணி.

 

 

இதுகுறித்து பேட்டியளித்த வில் ஜேக்ஸ், ‘நாங்கள் 10 ஓவரில் 120 ரன்கள் எடுப்போம் என அனைவரும் நம்பினர். ஆனால் நான் அதை அதிகப்படுத்த விரும்பினேன். நான் 98 ரன்கள் எடுக்கும் வரை சதம் அடிப்பேன் என நம்பவில்லை’ என்று கூறியுள்ளார்
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close