தடகள வீராங்கனை மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டு தடை: தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி 

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 08:07 am
athlete-manpreet-kaur-banned-for-four-years

சீனாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியின்போது, தடகள வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி தெரிவித்துள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் குண்டு எறிதலில் மன்பிரீத் கவுர் 18.86 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் கைப்பற்றினார்.  இப்போட்டியில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, நடைபெற்ற பெடரேஷன், ஆசிய தடகளம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய போட்டிகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியதன் தாக்கம் மன்பிரீத் கவுரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டு, இந்த பிரச்னையை குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி விசாரணை மேற்கொண்டது.  இந்த விசாரணையில் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக, தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த தடை காலம் 2017-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால், இந்த காலகட்டத்தில் மன்பிரீத் கவுர் கைப்பற்றிய பதக்கம் மற்றும் சாதனைகளை இழக்க வேண்டியது வரும் எனக் கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close