கோமதியைத் தொடர்ந்து, தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சித்ரா!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 01:04 pm
asian-athletics-championships-pu-chitra-wins-gold-in-women-s-1500-metre-final

கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பி.யு. சித்ரா 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

கத்தார் தலைநகர் தோஹாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தடகளப்  போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  இவர் 800 மீட்டர் பந்தய இலக்கை 2.02.7 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். 

இவரைத் தொடர்ந்து, இந்திய வீராங்கனை பி.யு. சித்ரா 1500 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 4.14.46 நிமிடங்களில் அவர் பந்தய இலக்கை அடைந்துள்ளார். சித்ரா, கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோமதியைத் தொடர்ந்து சித்ராவுக்கும், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடம் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. 

மேலும், ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி உள்பட 17 பதக்கங்களை பெற்றுள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close