ஐ.பி.எல்: டக்-அவுட்டில் சரித்திரம் படைத்த ஓப்பனிங் வீரர்கள்!

  நந்தினி   | Last Modified : 20 Apr, 2018 07:55 am

கிரிக்கெட் போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்குபவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். துவக்க வீரர்களிடையே அமையும் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்பதால், அணி நிர்வாகம் அவர்களை மிகவும் எச்சரிக்கையாகவே தேர்வு செய்து களமிறக்கும்.

இருப்பினும் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறும் துவக்க வீரர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணமாக மோசமான வீரர்களின் லைன்-அப் தேர்வு என்று குற்றம் சாட்டப்படும். இல்லையேல், ஃபீல்டிங் அணி சிறப்பான பந்துவீச்சு என்றும் கூறலாம்.தற்போது ஐ.பி.எல் நடந்து வரும் சூழ்நிலையில், துவக்க வீரர்களாக களமிறங்கிய இரு வீரர்களும் டக்கவுட்டான டாப் பட்டியலிலை பாப்போமா.. வாங்க...

பார்திவ் படேல் - ஸ்டீபன் ஃபிளெமிங் (சி.எஸ்.கே, 2008):

ஐ.பி.எல் அறிமுகமான முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டது. அவர்கள் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆல்-ரவுண்டராக இருந்தனர். முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையையும் ராஜஸ்தான் பெற்றது. மேலும், அந்த அணியில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சொஹைல் தன்வர் சிறப்பாக பந்துவீசி வந்தார்.

ஒருமுறை ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் சி.எஸ்.கே அணியுடன் ராஜஸ்தான் மோதியிருந்தது. அப்போது சி.எஸ்.கே-வின் தூண்களாக இருந்த பார்திவ் படேல் - ஸ்டீபன் ஃபிளெமிங்கை முதல் ஓவரிலேயே பெவிலியனுக்கு திருப்பினார் வேகப்பந்து வீச்சாளர் தன்வர். அதிலிருந்து மீளாத சி.எஸ்.கே 109 ரன்னில் சுருண்டது. அன்றைய போட்டியில் வெறும் 14 ரன் கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார் தன்வர். முடிவில், கிட்டத்தட்ட ஆறு ஓவர்கள் மிச்சம் இருக்கும் சூழலில், ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

க்ரேம் ஸ்மித் - ஸ்வப்னில் அஸ்னோத்கர் (ராஜஸ்தான், 2009):

இந்த முறை ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் மண்ணை கவ்வினர். போர்ட் எலிசபெத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 142 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் மோசமான துவக்கத்தை கொடுத்தது. டி.சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ் தனது இரண்டாவது பந்தில் ராஜஸ்தானின் துவக்க வீரர் க்ரேமை வெளியேற்றினார்.

இரண்டு பந்துகளுக்கு பிறகு, க்ரேம் பார்ட்னர் ஸ்வப்னில் ஒருவழியாக பந்தை அடித்து சிங்கிள் எடுக்க ஓடிய போது ரன்-அவுட்டானார். இதில் இருந்து மீண்டு வந்தாலும் மிடில் ஆர்டரில் ராஜஸ்தான் தடுமாற, டி.சி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆடம் கில்கிறிஸ்ட் - ஹெர்ஷெல் கிப்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ், 2009):

ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்க்கும் துவக்க லெஜெண்ட் இணை ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் - தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ்.

கிழக்கு லண்டனில் (தென் ஆப்பிரிக்கா) நடந்த போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக 179 ரன்களை சேஸ் செய்கையில் இருவரும் டக்கவுட் ஆனார்கள். அல்பி மோர்கெல், கில்கிறிஸ்ட் விக்கெட்டையும்; கிப்ஸ் விக்கெட்டை சுதீப் தியாகியும் கைப்பற்றினர். முடிவில் டி.சி அணியை 100 ரன்னில் (15 ஓவர்) சி.எஸ்.கே சுருட்டியது.

லூக் ரோஞ்சி - ஜீன்-பால் டுமினி (மும்பை இந்தியன்ஸ், 2009):

2009 சீசன் ஐ.பி.எல்-ல் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலையே இருந்தது. அதிகமுறை துவக்க வீரர்கள் டக்கவுட் ஆனதும் இந்த சீசனில் தான். மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் கிழக்கு லண்டனில் போட்டி நடந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஞ்சி விரைவான சிங்கிளை எடுக்க முயன்றார்.

ஆனால், டேவிட் வார்னர் ஸ்டாம்ப்பை நோக்கி ஸ்ட்ரெயிட் ஹிட் அடிக்க, ரோஞ்சி டக்கவுட் ஆகி சென்றார். அந்த ஓவரின் தனது கடைசி பந்தை விளாசிய டர்க் நன்னெஸ், டுமினியின் விக்கெட்டையும் எடுத்தார். 20 ஓவரில் மும்பை 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கவுதம் கம்பிர் - டேவிட் வார்னர் (டெல்லி டேர்டெவில்ஸ், 2009):

2009 சீசனில் முதல் அரையிறுதிச் சுற்றில் டெல்லி, டெக்கான் சார்ஜர்ஸ் மோதின. டெல்லிக்கு துவக்கம் சாத்தியமாக அமையவில்லை. கவுதம்- வார்னர் டக்கவுட் ஆக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸின் பந்தை எதிர்கொண்ட இருவரும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் 153 ரன்கள் எடுத்தது டெல்லி. ஆனால் அதனை தவிடுபொடியாக்கிய டி.சி அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் (35 பந்துகளில் 85 ரன், 10 பவுண்டரி, 5 சிக்ஸர்), போட்டியை எளிதான வெற்றி மூலம் முடித்து வைத்தார்.

பிரண்டன் மெக்கல்லம் - விவிஎஸ் லட்சுமண் (கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, 2011):

புதிதாக அறிமுகமான கேரளா- புனே வாரியர்ஸ் அணிகள் மோதிய போட்டியான இதில், கொச்சி துவக்க வீரர்கள் மெக்கல்லம் - லட்சுமண் டக்கவுட் ஆகி வாக்கவுட் செய்தார்கள். அல்போன்சோ தாமஸ் மெக்கல்லமை, முதல் பந்திலேயே பெவிலியனுக்கு திருப்பினார். மூன்றாவது ஓவரில் வெய்ன் பர்னெலிடம் ஸ்டம்ப்பில் அடி வாங்கிச் சென்றார். கொச்சி 148 ரன்னில் சுருண்டதால், புனே எளிதாக வெற்றி பெற்றது.

ஜாக்ஸ் கல்லிஸ் - கவுதம் கம்பிர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2014):

2014 ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்ற அணியாக கொல்கத்தா இருந்தாலும், அவர்களின் துவக்கம் டெல்லி அணிக்கு எதிராக மிகவும் கொடுமையானதாக அமைந்தது. துபாயில் நடந்த அந்த போட்டியில், இரண்டு திறமையான வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

முகமது ஷமியின் வேகத்தை எதிர்த்த கல்லிஸ், ரோஸ் டெய்லரிடம் அதே வேகத்தில் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார். நிலையான வீரராக இருந்தாலும், நாதன் கோல்ட்டர் நிலின் பந்து ஸ்டம்ப்பை நோக்கி பாய, கம்பிர் வந்த வழியே திரும்பிச் சென்றார். கொல்கத்தா 166 ரன் எடுத்து டஃப் பைட் கொடுத்தாலும், டெல்லி மிக எளிதில் வெற்றியை பிடித்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close