தோனியின் ரசிகர்களுக்கு இலவச உணவு! - அசத்தும் தோனியின் 'வெறித்தன' ரசிகர்!

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 01:31 pm
ms-dhoni-hotel-in-west-bengal-serves-free-food-to-dhoni-s-fans

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகர் ஒருவர் மேற்குவங்கத்தில் தான் நடத்தி வரும் ஹோட்டலில் தோனியின் ரசிகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 'கூல் கேப்டன்' என்றழைக்கப்படும் மகேந்திர சிங் தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும், வெறித்தனமான ரசிகர்கள் சிலர் தான் இதுபோன்ற வித்தியாசமான சேவைகளை வழங்குவதுண்டு. 

அப்படி தோனியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தான், மேற்குவங்கத்தில் அலிபுர்துவார் (Alipurduar) என்ற பகுதியில் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலின் பெயர் 'எம்.எஸ்.தோனி ஹோட்டல்'. இங்கு தோனியின் ரசிகர்கள் என்று கூறினால் இலவச உணவு வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து ஹோட்டலின் உரிமையாளர் ஷம்பு போஸ், "கிரிக்கெட்டில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் உண்டு. அதேமாதிரி கிரிக்கெட் வீரர் தோனியின் வெறித்தனமான ரசிகன் நான். எனது கிரிக்கெட் கனவு நிறைவேறவில்லை. எனவே, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. எனது திருப்திக்காக தோனியின் ரசிகர்களுக்கு இலவச உணவு அளித்து வருகிறேன். இங்கு பெங்காலி உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது சிறிய கடை என்றாலும் 'தோனி ஹோட்டல்' என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இந்த ஹோட்டல் தொடங்கி இரண்டு வருடம் நிறைவைடைகிறது. எனது சேவையை தொடர்ந்து வழங்குவேன்.

அதேபோன்று என் வாழ்நாளில் தோனியை ஒருமுறை சந்தித்தால் எனது ஹோட்டலுக்கு வந்து உணவருந்தும்படி அழைப்பேன். அதுவே இப்போதைக்கு எனது கனவு" என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close