ஐ.பி.எல்-ன் அழகு பெண்கள்!

  நந்தினி   | Last Modified : 06 May, 2018 02:25 pm

விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்த்துவந்த ரசிகர்களை, அதைத் தாண்டி நிறைய உள்ளது என்று தெரிய வைத்தது ஐ.பி.எல். குறிப்பாக கவர்ச்சி மாடல்களை அழைத்துவந்து, ஸ்டேடியத்தில் டான்ஸ் ஆட விட்டு சியர் கேர்ல்ஸை முதன்முதலில் இந்தியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதேபோல், அறைகுறை கவர்ச்சி ஆடையுடன் கிரிக்கெட் போட்டிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளை அறிமுகம் செய்ததும் ஐ.பி.எல்-தான். கோட் சூட் போட்டுக்கொண்டு இந்தி, இங்கிலீஷில் பேசிக்கொண்டிருந்தவர்களை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த கிளாமர் தொகுப்பாளினிகளின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதிலும், மந்திரா பேடிக்கு ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படி ரசிகர்களை கட்டிப்போட்ட தொகுப்பாளினிகள் பற்றி பார்க்கலாம்...

எரின் ஹொலண்ட்:

ஐ.பி.எல்-க்கு புது முகம் இந்த முன்னாள் உலக அழகி ஆஸ்திரேலியாவின் எரின் ஹொலண்ட். இந்த சீசனில் தான் தொகுப்பாளினியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் ஒரு பயிற்சிபெற்ற பாடகியாகவும் திறமை கொண்டவர். திறமைகளை தாண்டி, ஆஸ்திரேலியாவில் பல தொண்டு காரியங்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

மயந்தி லாங்கர்:

விளையாட்டு தொகுப்பாளினியாக அனைவருக்கும் பரிட்சியமான முகம் மயந்தி லாங்கர். இந்திய ஆல்-ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னியின் மனைவியான லாங்கர், கிரிக்கெட் போட்டியை தவிர பல விளையாட்டு போட்டிகளின் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். 2010 ஃபிபா உலக கோப்பை, 2010 காமன்வெல்த் போட்டி, 2011 கிரிக்கெட் உலக கோப்பை, 2014 இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். கால்பந்து இவருக்கு பிடித்தமான விளையாட்டாகும். கடந்த ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டியில் இவர் தான் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினி.

அர்ச்சனா விஜயா:

ஐ.பி.எல்-ல் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமானவர் அர்ச்சனா விஜயா. 2011ம் ஆண்டு ஐ.பி.எல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். 2015ம் ஆண்டு வரை இவரது ஐ.பி.எல் பயணம் தொடர்ந்தது. பல நாடுகளில் கிரிக்கெட் தொகுப்பாளினியாக இவர் இருந்துள்ளார். இவரது புன்னகைக்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

ஷிபானி டன்டேகர்:

மாடல், கதாநாயகி, என பன்முகங்களை கொண்டவர் தொகுப்பாளினி ஷிபானி டன்டேகர். புனேவை சேர்ந்த இவர் 2011ம் ஆண்டு முதல் 2015ம் வருடம் வரை ஐ.பி.எல் போட்டிக்கு தொகுப்பாளினியாக இருந்தார். மரியாதைக்குரிய ஷிபானி, கிரிக்கெட் உலகில் பல பாராட்டுகளை பெற்றுள்ளார். வீரர்களிடம் பேட்டி எடுக்கும் போது, அவருடைய நாளங்களில் கிரிக்கெட் ஓடுவது ரசிக்கும்படியாக இருக்கும்.

கரிஷ்மா கோடக்:

2013ம் ஆண்டு 6-வது ஐ.பி.எல் போட்டியை கரிஷ்மா கோடக் தொகுத்து வழங்கினார். ஷிபானி டன்டேகர் மற்றும் ரோசெல்லே ராவ் உடன் இவர் பணியாற்றினார். லண்டனில் பிறந்த இவர், இந்திய ரசிகர்களிடையே பெரியளவில் ஈர்க்கப்பட்டார். கிங்பிஷர் காலண்டரில் 2006ம் ஆண்டு இவர் இடம் பெற்றிருந்தார்.

ரோசெல்லே மரியா ராவ்:

இந்திய மாடல் அழகியான ரோசெல்லே, 2015-16 சீசனுக்கான ஐ.பி.எல் போட்டிக்கு தொகுப்பாளியாக இருந்தார். கிங்பிஷர் காலண்டரில் இடம் பெற்றுள்ள இவர், பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2016ம் ஆண்டு பிக் பாஸ் நிகச்சியிலும் இவர் ஃபேமஸ். 2012 மிஸ் இந்தியாவான ரோசெல்லே மிகவும் வசீகரமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர்.

பல்லவி ஷர்தா:

ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாக கொண்ட இந்த நடிகை, ஐ.பி.எல் போட்டியை அழகாகவும், கவர்ந்திழுக்கும் முறையிலும் தொகுத்து வழங்கியது பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் பல்லவியை கவனிக்க தொடங்கினர். இவர் 'மை நேம் இஸ் கான்' உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

ஈஷா குஹா:

முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான குஹா, 2009ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஐ.பி.எல் போட்டியில் மிகவும் மரியாதைக்குரிய குஹா, ரசிகர்களின் பிடித்தமானவர்களுள் ஒருவராவார்.

சோனாலி நாகராணி:

2003ம் ஆண்டு மிஸ் இந்தியாவான சோனாலி, ஐ.பி.எல் போட்டியில் தொகுப்பாளினியாக நான்கு வருடங்கள் பணியாற்றியுள்ளார். 2006 சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார். இவரின் கிரிக்கெட் ஆய்வைக் கண்டு ரசிகர்கள் வியந்ததுண்டு.

லேகா வாஷிங்டன்:

ஐ.பி.எல்-ன் முதல் தொகுப்பாளினி லேகா வாஷிங்டன். இதற்கு முன் எஸ்.எஸ். மியூசிக்கில் விஜெ-வாக இருந்தார். பல டி20 போட்டிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்துள்ள லேகா, இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சி.எஸ்.கே அணியின் மிகப்பெரிய ரசிகராவார்.

மந்திரா பேடி:

ஐ.பி.எல்-க்கு முன்பு இருந்தே மந்திரா பேடி ஃபேமஸ். 1994ம் ஆண்டு தூர்தர்ஷனில் வந்த சாந்தி என்ற நெடுந்தொடரில் பிரபல ஹீரோயின். 2000ம் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளின் பிரபல தொகுப்பாளினியாக இருந்தார். நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் மந்திரா பேடியின் அழகில், செயலில் மயங்கிய சோனி டெலிவிஷன் நிறுவனம், 2007ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ் என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்படி கூறியது. அப்போது மந்திராவுக்கு கிரிக்கெட் பற்றி பெரியதாக ஒன்றும் தெரியாதாம். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகில், கிரிக்கெட் கமெண்டரி உலகில் தன்னந்தனி ஆளாக களம் இறங்கினார் மந்திரா. முதல் நிகழ்ச்சியே சிக்ஸர்தான். அதைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு ஐ.பி.எல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவரை அழைத்தது. அந்த ஆண்டு அவருடைய நிகழ்ச்சி, ஆடைதான் டாப். அதைத் தொடர்ந்து மந்திராவை தமிழில் நடிக்க வைக்கக் கூட முயற்சிகள் நடந்தன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close