ஊக்கமருந்து சர்ச்சை: பளுதூக்குதல் வீராங்கனை சானு சஸ்பெண்ட்

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 10:22 am
indian-weightlifter-chanu-suspended-in-doping-charges

காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு, ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்து விட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்வதாக சர்வதேச பளுதூக்குதல் சங்கம் அறிவித்துள்ளது. 

2014 மற்றும் 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில், பளுதூக்குதலில் தங்கம் வென்று அசத்தியவர் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு குமுக்சம். சானு, ஊக்கமருந்து சோதனையில், தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச பளுதூக்குதல் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "சஞ்சிதா சானுவின் மாதிரிகளில் டெஸ்டாஸ்டரோன் (s1.1 அனபாலிக் ஏஜென்ட்) இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஊக்கமருந்து தடை விதிகளின் படி அவர் இதனால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்" என அறிக்கை வெளியிட்டது. 

இந்த முடிவை எதிர்த்து ஊக்கமருந்து தடை ஒழுங்கு ஆணையத்திடம் சானு மேல்முறையீடு செய்யலாம். ஆனால், அதில் அவர் தோல்வியடைந்தால், 2018ம் ஆண்டு அவர் வென்ற தங்க பதக்கம் அவரிடம் இது பறிக்கப்படும்.

2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில், 53கிலோ எடைப்பிரிவில் 192 கிலோ தூக்கி புதிய சாதனையோடு தனது இரண்டவது தங்கத்தை சானு வென்றது குறிப்பிடத்தக்கது. எப்போது எடுக்கப்பட்ட சோதனை இது என்பது குறித்து ஆணையம் எதுவும் தற்போதுக்கு கூற முடியாது என தெரிவித்து விட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close