சிங்கம், மானை வீட்டில் வளர்க்கும் கிரிக்கெட் வீரர்- வைரல் புகைப்படம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jun, 2018 03:06 am
shahid-afridi-shared-a-picture-of-his-daughter-with-a-chained-lion-in-the-background-and-earned-the-wrath-of-several-twitter-users-shahid-afridi-shared-a-picture-of-his-daughter-with-a-chained-lion-in-the-background-and-earned-the-wrath-of-several-twitter-users

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிதி தனது வீட்டில் செல்ல பிராணிகளாக சிங்கம், மான் போன்ற காட்டு விலங்குகளை வளர்ப்பது தெரியவந்துள்ளது. அவர் ட்விட்டரில் அவர் மான் ஒன்றிற்கு பாட்டிலில் பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும், அவரது மகள் சிங்கத்தின் முன் கைகளை நீட்டி கொண்டு நின்று போஸ் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும் சிங்கத்துடன் அப்ரிதி அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதிலிருந்து நாய், பூனைகளை வளர்ப்பது போன்று அவர் வீட்டில் சிங்கம், மான் போன்றவற்றை வளர்ப்பது தெரியவந்துள்ளது. வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்பூர்வமாக தவறு என்பதால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காட்டில் மிருகங்களை அடித்து சாப்பிடும் சிங்கம் அப்ரிதி போடும் சைவ உணவுகளை சாப்பிட்டு உடல் மெலிந்து காணப்படுகிறது. வீட்டில் நாய் கட்டப்பட்டிருப்பது போன்று ஒரு ஓரமாய் சிங்கத்தை கட்டுப்போட்டு வைத்துள்ளனர். இந்த புகைப்படத்திற்கு கீழே இப்போது எங்கே போனது பீட்டா அமைப்பு? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close