உலகின் 2வது இளைய செஸ் கிராண்ட் மாஸ்டர்; சென்னை சிறுவன் சாதனை!

  shriram   | Last Modified : 24 Jun, 2018 03:15 pm
chennai-kid-becomes-2nd-youngest-grand-master-ever

உலகின் 2வது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை, சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் ப்ரக்நாந்தா பெற்றுள்ளார். 

இத்தாலியில் நடைபெற்ற கிரெண்டின் ஓபன் செஸ் தொடரில் கலந்து கொண்ட ப்ரக்நாந்தா, இந்த சாதனையை படைத்துள்ளார். உலகின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனை, 2002ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 12 வயது உக்ரைன் சிறுவன் செர்ஜெட் கர்ஜகினிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.  கர்ஜகினை விட ப்ரக்நாந்தா வெறும் 3 மாதங்கள் மூத்தவரேயாவார். 

2016ம் ஆண்டு, தனது 10வது வயதில், உலகின் மிக இளைய செஸ் மாஸ்டர் என்ற சாதனையை படைத்த ப்ரக்நாந்தா, தற்போது 12 ஆண்டுகள் 10 மாதங்கள் 13 நாட்கள் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று தனது சாதனைகளை நீட்டித்துள்ளார். 8வது சுற்றில், கிராண்ட் மாஸ்டர் மோனிகா லிகாவை வீழ்த்திய சிறுவன் ப்ரக்நாந்தா, இறுதி சுற்றில் ப்ருஜ்சர்ஸ் ரோலந்தை வீழ்த்தி தனது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினர். 

இந்தியாய்வின் முதல் கிராண்ட் மாஸ்டரான விசுவநாதன் ஆனந்த், ப்ரக்நாந்தாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close