ஈரானை வீழ்த்தி கபடி மாஸ்டர்ஸ் பட்டம் வென்றது இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2018 07:37 pm
india-thumps-iran-to-win-kabaddi-masters-title

துபாயில் நடைபெற்று முடிந்த சர்வதேச கபடி மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில், பலம்வாய்ந்த ஈரானை இந்தியா துவம்சம் செய்து, கோப்பையை கைப்பற்றியது. 

உலகின் 2 டாப் அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் ஈரான், 6 நாடுகள் மோதும் சர்வதேச கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதி போட்டியில் மோதின. தொடர் முழுவதும் அனைத்து போட்டிகளிலும் இரு அணிகளும் முழு ஆதிக்கம் செலுத்தி அசத்தின. ஏற்கனவே 2016  கபடி மாஸ்டர்ஸ் இறுதி போட்டியில் ஈரானை இந்தியா வீழ்த்தியிருந்த நிலையில், இந்த போட்டியின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆரம்பத்தில் இந்தியா, ஈரானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து முழு ஆதிக்கம் செலுத்தியது. 15-5 என இந்தியா முன்னிலை பெற்றிருந்த நிலையில், பவர் கட் ஆனது. 10 நிமிடங்களுக்கு பிறகு, மீண்டும் போட்டி துவங்கியது. அதை பயன்படுத்தி சில புள்ளிகளை பெற்று 18-11 என்ற நிலைக்கு ஈரான் வந்தது. 

ஆனால், இரண்டாவது பாதியில் இந்தியா மீண்டும் அசத்தலாக விளையாடியது. முன்னாள் கேப்டன் தாகூர் மிக சிறப்பாக விளையாடி, பல ரெய்டுகளில் கலக்கினார். இறுதியில் போட்டி, 44-26 என இந்தியாவுக்கு சாதகமாக முடிந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close