நல்லா கிளப்பி விடுறாங்கய்யா - சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை ஏன் சென்னை வரவில்லை தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:39 am
why-swiss-no-1-snubbed-squash-championship-in-chennai

ஸ்விட்சர்லாந்து நாட்டின் நம்பர் 1 ஸ்குவாஷ் வீராங்கனை, சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்காதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு, அவரின் பெற்றோர் பதிலளித்துள்ளனர்.

சென்னையில் நடைபெறும் ஜீனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட வரும் ஸ்விஸ் நாட்டின் தேசிய ஸ்குவாஷ் அணியில்,  அந்நாட்டின் இளம் முதல்நிலை வீராங்கனை ஆம்ப்ரே ஆலிங்க்ஸ் பங்குபெறவில்லை. 4 வீரர்கள், 2 வீராங்கனைகள் ஸ்விஸ் அணியின் சார்பாக பங்குபெறுகின்றனர். ஆனால், ஆம்ப்ரே வராதது பல புருவங்களை உயர்த்தியது. இதையடுத்து, ஆம்ப்ரேவின் பெற்றோர், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததை சுட்டிக் காட்டி, தங்களது மகளை இங்கு அனுப்ப வேண்டாம் என முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கு இந்திய தரப்பில் இருந்து பல கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஆம்ப்ரேவின் பெற்றோர் வெளியிட்ட அறிக்கையில், ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறு என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தாங்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என தெரிவித்ததோடு, ஏன் ஆம்ப்ரே வரவில்லை என்ற காரணத்தையும் விளக்கினர்.

தங்களது மகள் தொடர்ந்து பல தொடர்களில் விளையாடி வருகிறார் என்றும், அவருக்கு ஓய்வு கொடுக்க இந்த தொடரில் பங்கேற்க வேண்டாம் என கடந்த ஆண்டே முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், குடும்பத்தோடு சுற்றுலா செல்ல எகிப்து வந்திருப்பதாகவும், போட்டியின்போது சுற்றுலா திட்டமிட்டதும் ஒரு காரணம் என அவர்கள் கூறுகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close