ஆசிய விளையாட்டு போட்டிகள்: மல்யுத்தத்தில் இந்தியா தங்கம்

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2018 05:53 am
asiad-indian-wrestler-bajrang-punia-wins-gold

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு தொடரின் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில், பிரபல ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில், 65 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டு வீரர் டைச்சி டக்காடானியை 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார் புனியா.

இது மல்யுத்தத்தில் புனியாவுக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கமாகும். 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பஜ்ரங் புனியா 61 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close