நடப்பு சாம்பியன் பாட்னாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்!

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 05:18 am
tamil-thalaivas-crush-champions-patna

சென்னையில் நடைபெற்ற போட்டியில், ப்ரோ கபடி லீக்கின் நடப்பு சாம்பியன்களான பலம்வாய்ந்த பாட்னா பைரேட்ஸை, தமிழ் தலைவாஸ் வீழ்த்தி வெற்றி துவக்கம் பெற்றது.

2018 ப்ரோ கபடி லீக் தொடரின் முதல் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸுடன் மோதியது. சென்னை ஜவஹர்லால் நேரு உள் மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. முதல் போட்டி என்பதால், ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அட்டகாசமாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி பாட்னாவை பந்தாடியது. 

ஆட்டத்தின் முதல் பகுதியிலேயே, இரண்டு முறை ஆல் அவுட்டானது பாட்னா. நட்சத்திர வீரர் மற்றும் இந்திய கேப்டன் அஜய் தாகூர், 14 புள்ளிகள் பெற்று அசத்தினார். சுர்ஜீத் சிங் 7 புள்ளிகள் பெற்றார். முதல் பகுதியிலேயே அதிக முன்னிலை பெற்ற தலைவாஸை, பாட்னா அணியால் பிடிக்கமுடியவில்லை. இரண்டாவது பாதியில் பாட்னா வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், தலைவாஸ் 42-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close