இளையோர் ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் முதல் வெள்ளிப்பதக்கம்

  டேவிட்   | Last Modified : 18 Oct, 2018 02:55 pm
youth-olympics-india-s-first-silver-in-archery

இளையோர் ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்


அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 


அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.  
இதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளது. அரியானாவைச் சேர்ந்த ஆகாஷ் மாலிக் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர். இவரது தந்தை விவசாயியாக இருந்தாலும்,  அவர் தன்னைப் போல் தன் மகனும் விவசாயம் செய்ய வேண்டும் என விரும்பவில்லை.


இதுகுறித்து ஆகாஷ் மாலிக் கூறுகையில், ‘நான் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். ஆனால், வில்வித்தையில் பயிற்சி பெற்று பதக்கங்கள் வாங்கத் தொடங்கியதும், எனது பயிற்சிக்கு முழு ஆதரவு அளித்தனர். 


இப்போது எனது பெற்றோர்கள்  மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அடுத்து 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு அதிக முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் ’ என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close