புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது யு மும்பா

  டேவிட்   | Last Modified : 18 Oct, 2018 03:51 pm
pro-league-kabaddi-u-mumba-beat-haryana-stealers

சோனிபட்டில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை யு மும்பா அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று  வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் யு மும்பா அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடினர். ஆனாலும், சுதாரித்துக் கொண்ட யு மும்பா அணியினர் முதல் பாதியில் 24 -13 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

யு மும்பா அணியின் சித்தார்த் தேசய் 15 ரெய்டு பாய்ண்ட் எடுத்ததினால், யு மும்பா அணி 42 -32 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அரியானாவுக்கு இது 5-வது தோல்வியும், யு மும்பா அணிக்கு இது மூன்றாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close