இளையோர் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது

  டேவிட்   | Last Modified : 18 Oct, 2018 05:47 pm
closing-ceremony-of-2018-youth-olympic-games

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை இந்தியா 13 பதக்கங்களுடன் 16வது இடத்தில் உள்ளது.

அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனோஸ் ஏர்ஸ் நகரில் கடந்த 6ஆம் தேதி இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இதில் 36 விளையாட்டுப் போட்டிகளில் 46 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். துப்பாக்கிச்சுடுதலில் 2 தங்கம், 2 வெள்ளியும், பளுதூக்குதலில் 1 தங்கமும், ஹாக்கி அணி 2 வெள்ளியும், தடகளத்தில் 1 வெள்ளி, 1 வெண்கலமும், இந்தியா கைப்பற்றியுள்ளது.

மேலும், வில்வித்தையில் 1 வெள்ளி, இறகுப்பந்தில் 1 வெள்ளி, ஜுடோவில் 1 வெள்ளி, மல்யுத்தத்தில் 1 வெள்ளி ஆகியவற்றை இந்திய வீரர், வீராங்கனைகள் கைப்பற்றினர். மொத்தத்தில் 3 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் இந்தியா 16வது இடத்தில் உள்ளது. இப்போட்டியின் நிறைவு விழா இந்திய நேரப்படி அதிகாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close