சென்னையில் மாநில அளவிலான ரோல்பால் போட்டி தொடங்கியது.

  டேவிட்   | Last Modified : 19 Oct, 2018 06:00 pm
u-11-state-level-rollball-championship

சென்னையில் மாநில அளவிலான ரோல்பால் போட்டி இன்று தொடங்கியது. 

சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் பள்ளியில். 11 வயதிற்கு உட்பட்டேடாருக்கான மாநில அளவிலான ரோல்பால் போட்டி இன்று தொடங்கியது. போட்டியை தமிழ்நாடு ரோல்பால் சங்கத் தலைவர் தேவநாதன் தொடங்கி வைத்தார். 

போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. 22 மாவட்டங்களில் இருந்து 22 சிறுவர் மற்றும் 12 சிறுமியர் அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். 

அரையிறுதிப் போட்டிகள் 21ஆம் தேதி காலையும், இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் மாலையும் நடைபெறவுள்ளது.  இந்தப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக சென்னை மாவட்ட ரோல்பால் சங்கத் தலைவர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். 

தொடக்க விழாவில், தமிழ்நாடு ரோல் பந்து சங்க பொதுச் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார், முன்னாள் துணை ஆணையர் கலியமூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close