டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

  டேவிட்   | Last Modified : 20 Oct, 2018 02:59 pm
saina-nehwal-qualified-for-semi-finals-in-denmark-open-badminton

 டென்மார்க்கில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க் நாட்டில் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா வீராங்கனை சாய்னா நேவால்- முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹாரா ஆகியோர் மோதினர்.

இதில் முதல் செட்டை 17-21 என்ற கணக்கில் இருந்த சாய்னா அடுத்த இரண்டு செட்டுகளை தன் வசப்படுத்தினார். இறுதியில் சாய்னா நேவால் 17-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  அரை இறுதியில் சாய்னா, இந்தோனேஷியாவின் மாரீஸ்கா ஆகியோர் மோதுகின்றனர். 

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் சக நாட்டு வீரர் சமீர் வர்மாவை 22-20, 19-21, 23-21 என்ற கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரரான கென்டூ மோமொடாவுடன் மோதுகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close