டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்

  டேவிட்   | Last Modified : 20 Oct, 2018 07:33 pm
saina-entered-finals-in-denmark-open-badminton

டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இப்போட்டியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19வது இடத்தில் உள்ள கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரையிறுதியில் மோதினார்.

இந்த அரையிறுதிப்போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டி 30 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. சாய்னா நேவால் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் விளையாட உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close