மாநில எறிபந்து போட்டியில் கரூர், திருவள்ளுர் அணிகள் வெற்றி

  டேவிட்   | Last Modified : 22 Oct, 2018 12:01 pm
karur-thiruvallur-won-the-title-in-state-throwball-championship

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான எறிபந்து போட்டியில் கரூர் மற்றும் திருவள்ளுர் அணிகள் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தன. 

சேலம் மாவட்டம் விநாயகா மிஷின் கல்லூரியில், தமிழ்நாடு எறிபந்து சங்கம் மற்றும் சேலம் மாவட்ட எறிபந்து சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 15வது மாநில எறிபந்து போட்டி கடந்த 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. 

நேற்று நடைபெற்ற ஆடவர் இறுதிப்போட்டியில் கரூர் அணி 15-08, 15-10 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால், கரூர் அணி முதல் இடத்தையும், சென்னை அணி இரண்டாவது இடத்தையும் கைப்பற்றின. திருப்பூர் அணி மூன்றாவது இடத்தையும், கோவை அணி நான்காவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன..

முன்னதாக நடைபெற்ற மகளிர் இறுதிப்போடடியில், திருவள்ளுர் அணியும் சென்னை அணியும் மோதின. இதில் 15-11, 15-07 என்ற புள்ளிக் கணக்கில் திருவள்ளுர் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தை திருப்பூர் அணியும், நான்காவது இடத்தை காஞ்சிபுரம் அணியும் கைப்பற்றின. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close