உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா

  டேவிட்   | Last Modified : 22 Oct, 2018 11:53 am
bajrang-punia-enters-finals-in-the-world-wrestling-championship

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, கியூபா வீரர் வால்டேசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றியுள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா முதலாவது சுற்றில் ஹங்கேரியைச் சேர்ந்த ரோமன் அஷாரினையும், 2-வது சுற்றில் தென்கொரியாவைச் சேர்ந்த லீ சியங்கையும், காலிறுதியில் மங்கோலியாவின் துல்கா துமர் ஒசிரையும் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து அரையிறுதியில் கியூபாவின் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை  4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  இதன் மூலம் ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியனான பஜ்ரங் பூனியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close