உலக கைப்பந்து: முதன்முறையாக செர்பியா மகளிர் சாம்பியன் ஆனது

  டேவிட்   | Last Modified : 23 Oct, 2018 08:13 pm
world-women-s-volleyball-serbia-won-the-title

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற உலக மகளிர் கைப்பந்து போட்டியில் செர்பியா அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கதைக் கைப்பற்றியுள்ளது. செர்பியா அணி பதக்கம் வெல்வது, கைப்பந்து வரலாற்றிலே் இதுவே முதன்முறை.
ஜப்பான் நாட்டின் யோகோஹாமா நகரில் 18வது உலக மகளிர் கைப்பந்து போட்டி கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், இத்தாலியும் செர்பியாவும் மோதின.

இந்த கடும் ஆட்டத்தில், 21-25,    25-14,    23-25, 25-19, 15-12 என்ற புள்ளிக் கணக்கில் இத்தாலி அணி வெற்றி  உலக சாம்பியன் ஆனது. செர்பியா அணி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. அதுவும் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதகத்தை வென்று உலக சாம்பியன் ஆனது அனைவரையும் உலக கைப்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செர்பியாவிடம் தோல்வியைக் கண்ட இத்தாலி இரண்டாவது இடத்தையும், சீனா மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக செர்பியாவின் டிஜானா பாஸ்கோவிக் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close