புரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸ் அணிக்கு 2வது வெற்றி

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2018 12:14 pm
pro-kabaddi-league-tamil-thalaivas-register-second-victory

புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே படான் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல நகரஙகளில் நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் மோதின.

தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே 5 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால், ஆட்டத்தின் தொடக்கம் விறுவிறுப்பாக இருந்தது. இதனால் அந்த அணியின் புள்ளிகள் உயர்ந்து வந்தது. சொந்த மண்ணில் விளையாடுவதால் புனே அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு கடும் நெருக்கடியை தந்தது.

அஜய் தாக்கூர் சிறப்பாக ஆடி 12 ரெய்டு பாய்ண்ட்கள் பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்பட்டதால், 36-31 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. யு மும்பை அணி சிறப்பாக செயல்பட்டதால், 41- 20 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைடன்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close