சென்னை பல்கலை தடகள போட்டிகள் தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2018 01:50 pm
madras-university-athletic-meet-begins

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், சென்னை பல்கலைக்கழக தடகள போட்டி இன்று தொடங்கியது. இதில் 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதில் சென்னை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 22 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டிகள் நடைபெறும். மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டெர்ரான்ஸ் ரோட்ரிஜோ போட்டியை தொடங்கி வைத்தார். 

இன்று நடைபெற்ற 5000 மீட்டர்  தடகள போட்டியில் பெண்கள் பிரிவில் ஜஸ்வர்யா மற்றும் ஆண்கள் பிரிவில் அஜய் தர்மா ஆகியோர். வெற்றி  பெற்றனர். 400 மீட்டர் தடகள போட்டியில் சென்னையைச் சேர்ந்த திவ்யா 1:00:48 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றார். ஆண்கள் பிரிவில் கெவின் கிரண் ராஜ் வெற்றி பெற்ற உள்ளார்.

பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கலந்து கொண்டு பரிசு வழங்கவுள்ளதாகவும், இதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான பல்கலைக்கழக போட்டியில் பங்கேற்பார்கள் எனவும், சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close