பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - ஸ்ரீகாந்த் கிடாம்பி காலிறுதிக்கு முன்னேற்றம்

  டேவிட்   | Last Modified : 25 Oct, 2018 08:56 pm
srikanth-kidambi-enters-quarter-finals-in-french-open-badminton

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தென்கொரிய வீரர் லீ டாங் கெயுன்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை 12-21 என ஸ்ரீகாந்த் கிதாம்பி இழந்தார். பின்னர் ஸ்ரீகாந்த் 2-வது செட்டை 21-16 எனவும், வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஸ்ரீகாந்த் கிடாம்பி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஸ்ரீகாந்த் கிடாம்பி காலிறுதிப் போட்டியில் நம்பர் வீரரான கேன்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close