உலக மல்யுத்தப் போட்டி: வெண்கலம் வென்றார் பூஜா தாண்டா

  டேவிட்   | Last Modified : 26 Oct, 2018 02:58 pm
pooja-dhanda-secured-bronze-in-the-world-wresting-championship

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா தாண்டா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா தாண்டா, முதல் சுற்றில் ரஷ்யாவின் கிரோசாசேவாவையும், இரண்டாவது சுற்றில் நைஜீரியாவின் ஓடுனாயவையும் வீழ்த்தினார். காலிறுதியில் ராங் சீனாவின் நிங்நிங்விடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் ராங் நிங்நிங் ஃபைனலுக்கு முன்னேறியதையடுத்து பூஜா தாண்டாவுக்கு ரெபிசேஜ் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து நடைபெற்ற ரெபிசேஜ் இரண்டாவது சுற்றில் அஜர்பெய்ஜானின் அல்யோனாவை எதிர்கொண்ட பூஜா தாண்டா 3-8 என வெற்றிபெற்றார். தொடர்ந்து நடைபெற்ற வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், நார்வேவின் கிரேஸ் புல்டனை எதிர்கொண்ட இவர் 7-10 என வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். 

இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பூஜா தாண்டா பெற்றுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close