சென்னை பல்கலை தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா சாம்பியன்

  டேவிட்   | Last Modified : 27 Oct, 2018 10:24 am
madras-university-athletic-meet-mob-vaishnava-won-the-title

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் பெண்கள் மகளிர் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51–வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கடைசி நாளான நேற்று 2 புதிய போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் லயோலா வீரர் சுவாமிநாதன் 7.71 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கம் வென்றார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை ஹர்ஷினி 6.08 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். 

பெண்களுக்கான அரை மாரத்தான் பந்தயத்தில் ஆனந்தி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரீஜா  1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சப்மிதா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.

ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி 7 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கத்துடன் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லயோலா கல்லூரி 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் 2–வது இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி 14 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் 16–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close