• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

புரோ கபடி லீக்: உபி யோதாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்

  டேவிட்   | Last Modified : 03 Nov, 2018 01:12 am

pro-kabaddi-league-tamil-thalaivaas-beat-up-yoda

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் உபி யோதா அணியை 46 - 24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ் அணி.

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உபி யோதா அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின.  தமிழ் தலைவாஸ் அணி 8 ஆட்டத்தில் 6 தோல்வி கண்டிருந்ததது. எனவே, இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 26 -11 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அபாரமாக விளையாடியது. இறுதியில், உபி யோதாவை 46 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.