புரோ கபடி: தொடர்ந்து வெற்றியடைந்து வரும் குஜராத் அணி

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 10:48 am

fortune-giants-continued-their-winning-streak

உத்திரபிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில் டெல்லி  45-38 புள்ளிக்கணக்கில் குஜராத் அணி வெற்றி பெற்றது. 

ஐ.பி.எல் போல இந்தியாவில் 12 அணிகள் பங்கேற்கும் வது புரோ கபடி தொடர் நடந்து வருகிறது. இதில் உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி தபாங் அணியும், குஜராத் பார்ச்சுன் ஜயண்ட்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணி அபாரமாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி 27 - 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் குஜராத் அணி சிறப்பாக ஆடியது.

இறுதியில், டெல்லி அணியை 45 -38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணிக்கு கிடைத்த ஐந்தாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.